https://www.blogger.com/blog/post/edit/5026060815028163675/1343155528472612032#

Monday, February 26, 2024

South VS North

 

நீலகண்டன் எழுதிய South VS Northலிருந்து

டேட்டா அறிவியலாளர் எழுதிய தெற்கும் வடக்கும் புத்தகம் அதன் டேட்டா ஆய்வு என்ற நோக்கில் சமீபத்தில் பேசப்பட்ட புத்தகம். முன்னர் அதிலிருந்து சில அம்சங்களை முகநூலில் தந்திருந்தேன். இதை அடுத்த பகுதியாக தந்துள்ளேன்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் மாநில அளவில் சீராக இல்லை. மாறுபட்ட அளவில் நடந்து வருகிறது. இதனால் வறுமை பிரச்சனை மட்டுமல்ல அரசியல் அதிகாரம் என்கிற பிரச்சனையின் தன்மையும் அழுத்தமும் கூட மாறுபடுகிறது. தென் மாநிலங்களில் அம்மக்கள் கட்டுப்பாட்டுடன் மேற்கொண்ட குடும்பக்கட்டுப்பாடு என்பது  வேறு பகுதி மாநிலங்களில் காணப்படாததால், வருகிற 2026 தொகுதிகள் வரையறை என்பதும் பிரச்சனையாகலாம் என்கிற குரல் வலுவாக எழுந்து வருகிறது.

1971-2011 வரை மக்கள் தொகை பெருக்கம் எந்த சதவீத அளவில் நடந்துள்ளது என்பதை சென்சஸ் ரிஜிஸ்ட்ரார் தந்துள்ளார்.

ராஜஸ்தானில் பெருக்கம் 166 சதம், ஹரியானா 157, பீகார் 146, எம்பி 142, உபி 138, ஜார்கண்ட் 132, குஜராத் 126, உத்தராகண்ட் 125, மகராஷ்ட்ரா 123, சட்டிஷ்கர் 119, அஸ்ஸாம் 113, கர்நாடகா 109, மேவ 106, பஞ்சாப் 104, ஹிமாச்சல் 98, ஒரிஸ்ஸா 91, கோவா 83, தமிழ்நாடு 75, கேரளா 56

ராஜஸ்தான் 166 சதம் உயர்ந்தது என்றால் அதன் பொருளை நீலகண்டன்சவுத் வெர்சஸ் நார்த்” ஆசிரியர் சொல்கிறார். அங்கு 2.57 கோடி மக்கள் 2011ல் 6.86 கோடியாக உயர்ந்துள்ளனர். இரு மடங்கிற்கு மேலாக..

உபி எடுத்துக்கொண்டால் 80 எம்பிக்கள். 2011ல் மக்கள் தொகை 20.3 கோடி. சராசரி எம்பி தொகுதிக்கு 25 லட்சம் மக்கள் எனலாம். தமிழ்நாட்டில் 2011ல் 7.2 கோடி மக்கள்- 39 தொகுதிகள். சராசரி பார்த்தால் 18லட்சம். இதை வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ பங்கேற்பு உபி விட 30 சதம் அதிகம் எனச் சொல்லிவிடுகிறார்கள். அடுத்த கணக்கில் 2011-2026ல் உபி கூடுதலாக 6.2 கோடி வாக்களரை பெறலாம். இதனால் அங்கு 80 தொகுதிகளில் சராசரியாக பிரதிநிதித்துவம் 33.6 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்றாகும். தமிழ்நாட்டில் 2011-26ல் 1.5 கோடி வாக்காளர் கூடலாம். இதனால் பிரதிநிதித்துவம் 22 லட்சத்துக்கு ஒரு எம்பி என்றாகும்.

யூனியன் அரசாங்கம் மொத்த வரிகளில் 2/3 மடங்கை பெறுகிறது. செலவில் 1/3 மடங்கை செய்கிறது என்கிறார் நீலகண்டன். Union Transfers as % of Gross tax Rev 2010-11 62.1% in UPA , in 2020-21 59.7 % in BJP rule.and this was the highest in BJP rule as per 15th FC figures. During UPA in 2013-14 it was 53.7 %.

cess plus surcharges collection for Union in 2011-12 was 10.4 of gross tax rev- this became 2019-20 into 20.2 %.-  மாநிலங்கள் இதைத்தான் மத்திய் அரசின் தனிக்கொள்ளை என்கின்றனர்.

 நீலகண்டன் மாநிலங்களிலிருந்து பெறுவது தருவது குறித்த 15வது நிதிக்குழு அட்டவணைகளை தந்துள்ளார். கேரளாவிற்கு தரப்படும் விகிதம் 12வது நிதிக்குழுவில் 2.67 சதம் எனில் 15 வது குழுவில் 1.93 ஆனது. கேரளா அலகேஷனில் 27.7 சத வீழ்ச்சி என்பதால் அவ்வரசாங்கம் போராடி வருகிறது. தமிழகத்திற்கு இந்த நட்டம் 23.1 சதம் என்பதால் இங்கும் போர்க்குரல் எழுகிறது. அடுத்த நிலைகளில் பாதிக்கப்பட்டவை கர்நாடகாவும் ஆந்திரமும். சாதகம் அடைந்த மாநிலங்களாக பஞ்சாப், மபி, மேவ ராஜஸ்தான் சொல்லலாம்.  உபி, குஜராத், பீகார் எல்லாம் கூட சற்று குறைந்த அளவில் வீழ்ச்சியைக் கண்டன.

Imperfect UNion என்பதை நேர் செய்வதெப்படி என நீலகண்டன் விவாதிக்கிறார். From the majoritarian chaos to maximal decentralisation  என தன் ஆலோசனையை முன்வைக்கிறார்.  First Past the PostGood for Horses , bad for democracy  என்கிறார். 2014 தேர்தலில் 31 சத வாக்குகளில் 282 இடங்களை பாஜக பெற்றால், 19 சத வாக்குகளைப் பெற்ற காங்கிரசால் 8 சத இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது.

 நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர் நாம் விழையும் பாலிசிக்கு வாக்களிப்பார் என்பதிலும் ஏமாற்றம் நிலவுகிறது. மக்கள் வேட்பாளரை தேர்தெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. வேட்பாளரை கட்சி தேர்ந்தெடுப்பதால், அவர் கட்சியின் முடிவை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு கட்சி வழியாகத்தான் career incentives  கிடைக்கிறது. கட்சியில் ஒருவரின் வளர்ச்சிக்கான CR- Monitoring  கட்சித் தலைமையால் நடத்தப்படுகிறது. Political parties control the career ladder  என நீலகண்டன் இங்கு சொல்கிறார்.

அரசாங்கத்தின் , ஆட்சியின் , கட்சியின் stability  என்பதோ inversely related to which power is centralised. அதிக அதிகாரத்துவ மத்தியம் என்பதுடன் நிலைத்தன்மை கட்டிப்போடப்படுகிறது. அங்கு multiple points of veto power என்பது ஏற்கப்படுவதில்லை.

This system  risks tyranny by investing extraordinary powers in the hands of individual leaders and party bosses, in effect making most of the elected MP powerless..Representative models allow a gradual accrual of power in the hands of Executive  என்று நீலகண்டன் தன் பார்வையை முன்வைக்கிறார்.

இந்த ஜனநாயக முறையின் வேறு ஒரு விளைவையும் நாம் கண்டு வருகிறோம். personality cult  வளர்த்தெடுக்கப்படுகிறது. இது great man politics- king philosopher  வகைப்பட்டதாக மாற்றப்படுகிறது. மாநிலங்களிலும் political Entrpeneurs- business enterprises போல கட்சிகள் உருவாகிவிடுகின்றன.

 நீலகண்டன் தன் தீர்வாக Gamified Direct Democracy  என்பதை முன்வைக்கிறார். பிரதிநிதிகளை அனுப்பி சட்டம் இயற்றுதல் என்றில்லாமல், சட்டங்கள் அமுலாக நேரடி வாக்குமுறை- அச்சட்டங்களுக்கான வாக்குமுறை என்கிறார்.  Localised My society  முறை என்பதன் விரிவாக்கம் என்கிறார். இப்போதைக்கு ஆர்வம் உள்ளவர் இந்த புத்தகத்தைப் படிக்கலாம். அவர் சொல்லும் இந்திய சோதனை இன்றைக்கு கனவு நிலையில் தான் இருக்கமுடியும்.

Saturday, February 24, 2024

Glimpses of World History

 இந்திராவிற்கு நேரு தன் சிறைவாழ்வில் எழுதிய உலக வரலாறு குறித்த கடிதங்களின் தொகுப்பு Glimpses of World History வந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திரா ஆட்சிக்காலத்தில் 1982ல் மீள் பதிப்பும், சோனியா முன்னுரையுடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே தொகுதியாக 1100 பக்கங்களில் நேருவின் அப்புத்தகம் வந்துள்ளது.

பெங்குவின் ரூ 900க்கு இப்பெரும் புத்தகத்தை அப்போது போட்டிருந்தனர். இப்போது கூட கிடைக்கலாம். விடுதலைக்கு முன்னரான நேருவின் மூன்று மிக முக்கிய புத்தகங்களில் Glimpses of world History ம் ஒன்று. மற்ற இரண்டு Autobiography, Discovery of India.
நேருவின் historiography வரலாற்றைப் புரிதலும் அதை முன்வைத்தலும் விரிவான வாசிப்பிற்குரிய ஒன்றாகவே எனக்குப்படுகிறது. அவர் நடந்த வரலாற்று நிகழ்வுகளை வெறும் மோதல் பாதைக்கான நிகழ் களமாக மாற்றிவிடாமல், பொருத்தமான இணைக்கத்தேர்வுகளை, composite culture காரணிகளை தேட முயற்சிப்பவராக இருப்பதைக் காணமுடியும்.
இந்திய பண்டைய வரலாறாக இருந்தாலும், உலக நாடுகளின் வரலாறுகளாக இருந்தாலும் எதுவும் still civilisation or stagnated ஒன்றாக இருக்கவில்லை என்ற புரிதலை அவர் மனம் கொள்கிறார். மானுட வரலாற்றின் நீள் திசையின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை நொடிதோறும் எவரும் உள்ளது உள்ளபடி எழுதி வைத்திருக்கவும் முடியாது. பேசி சென்றிருக்கவும் முடியாது. கிடைத்தவற்றை ஏ எல் பாசம் சொல்வது போல controlled imagination யைத் தூவித்தான் வரலாறு அதை பிரதியாக்குபவர்களால் நமக்கு கைமாற்றித் தரப்படுகிறது.
முழுமையான இருட்டில் துழாவுதற்குப் பதில் ஆங்காங்கே கிடைக்கும் சிறு கைவிளக்குகளாக இந்த history யை narrativeயை எடுத்துக்கொள்வது நலம். அதை முடிந்தவரை பகுத்தறிவின் எல்லைக்குள் வைத்திருப்பதும் நலம். அதை வழிபாட்டு நம்பிக்கை பல்லக்கில் வைத்து திருப்பணிகள் நடத்துவதும், அதையே நம்பி பழிதீர்த்துக்கொள்ளும் கள விளையாட்டுக்களை நடத்துவதும் வரலாற்றை துப்பாக்கியாக்கும் முயற்சியாகிவிடும்.
வரலாற்றை எழுதும்போது விடுபடல்கள் எவருக்கும் நேரலாம். அது conscious or unconscious attempt ஆக இருந்திருக்கலாம். அதை நேர்செய்தல் வேறுவகைப்பட்ட வரலாற்றாய்வாளர்க்கு அவசியமாகலாம். விடுபடல்களைச் சொல்வது, சொன்னதில் தரவுகளின்படி தவறு இருந்தால் அதைச் சுட்டி சரிசெய்வது , ஹிஸ்டோரியாகிராபி குறித்த ஆரோக்கியமான முறையாகலாம். தேவைப்படும் அரசியலுக்கேற்ப வரலாற்றை தைப்பது என்பது அரசியலுக்கும் வரலாற்றிற்குமே ஆபத்தாகலாம்.
நேரு சிறையில் தனக்கு கிடைத்த எச் ஜி வெல்ஸ் உள்ளிட்டவர் எழுத்துக்களைக்கொண்டு , கடித வழி இலக்கியமாக உலக வரலாற்றை இந்திரா எனும் மகள் மாணவிக்கு சொல்ல முயன்றுள்ளார். 196 கடிதங்கள்..சில இடங்களில் மட்டுமே அன்பை வெளிப்படுத்தும் personal touch மிகக் குறைந்த வரிகளாக ஏக்கத்துடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எடுத்துக்கொண்ட task ல் கவனமாக நேரு travel செய்திருப்பார். அய்ரோப்பா, ஆசியா நாடுகளின் முன்னோடி நாகரிகப் பகுதிகள் குறித்து - கிரீஸ் ரோம் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி, இந்தியா சீனா ஜப்பான் அராபியா, பின்னர் வந்த அமெரிக்கா குறித்து ஏராள செய்திகளை அவற்றின் வரலாற்று போக்கில் நேரு தந்திருப்பார்.
வரலாறு என்கிறபோது சுவாரஸ்யமான, சற்று தொய்வு ஏற்படுத்தும் எழுத்துக்கள் கலந்தே இருக்கும். நேருவின் இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கு என சொல்லமுடியாது. முதல் 600 பக்கங்களுக்கு மேல் அவர் நன்கறிந்த உணர்ந்த 19- 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்று கதைகள் பின்னப்பட்டிருக்கும்.
வரலாற்றில் ஆர்வம் இருந்தவர், நேரு அபிமானிகள் என பலரும், நேரு வெறுப்பாளர்களில் சிலரும் இந்நூலை படித்திருப்பர். இக்கால இளைஞர்களுக்கும் சற்று எளிய வகையில் ஒரே நூலில் உலக வரலாற்றின் சில வெளிச்சப்புள்ளிகளை அல்லது தொடுகோடுகளை இந்நூல் 20 ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள்வரை காட்டும்.
வாய்ப்புள்ளவர் சற்று மல்லுக்கட்டினால் இந்நூலை வாசிக்க இயலும் என்று நம்புகிறேன்.
20-2-2024

Caste Its Twentieth Century Avatar

 Caste Its Twentieth Century Avatar வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. புகழ்வாய்ந்த எம் என் ஶ்ரீனிவாஸ் பலரின் கட்டுரைகளை தொகுத்து எடிட் செய்துள்ள பெங்குவின் வெளியீடு.  2016 அக்டோபரில் ஶ்ரீனிவாஸ் அறிமுகத்தையும், தமிழ்நாட்டில் பிற்பட்டோர் இயக்கம் என்கிற கட்டுரையையும் படித்து இப்புத்தகத்தை விட்டிருக்கிறேன். 

கண்ணில் பட்டதும் மீண்டும் முழு நூலையும் படிக்கவேண்டும் என்கிற நினைப்பு..காரியமாகவேண்டும். அறிமுகம் தவிர நூலில் 13 ஆய்வாளர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஶ்ரீனிவாஸ் சாதி குறித்து ஆண்களே எழுதிக்கொண்டிருக்கிற குறையைப் போக்க ஐராவதி கார்வே, பவுலின் கொலந்தா, பேரா லீலா போன்றவர்கள் எழுதவந்ததைச் சொல்லி ஆறுதல் அடைவார்.  இந்த நூலின் முதல் கட்டுரையாக பேரா லீலா ட்யூப் அவர்களின் சாதியும் பெண்களும் கட்டுரையை வைத்திருப்பார் ஶ்ரீனிவாஸ்.

லீலாவின் இந்த வரிகளை ஶ்ரீனிவாசும் மேற்கோள் காட்டியிருப்பார்

Caste is not dead. Gender is a live issue. The principles of caste inform the nature of sexual asymmetry Hindu society, and hierarchical of caste are articulated by gender.

Gender caste  linkage குறித்து  லீனா விரிவாக பேசியிருப்பார். லீனா சாதித்தன்மையின் மூன்று அடிப்படைக் கூறுகளாக பிறப்பு வழி தனித்தன்மை, மேல் கீழ் செங்குத்து ஸ்டேடஸ், ஒருவரை ஒருவர் சார்ந்த தொழில் பிரிவினை என்பதை முன்வைப்பார். இந்த தன்மைகள் தனிமனிதர் வழியாக அல்லாமல் units based on kinship வழி இயங்கு தன்மை கொண்டவை எனவும் வரையறுப்பார். Familial units kinship units . 

குடும்ப பழக்கம் என்கிற கலாச்சார நடைமுறைகள் சடங்கு சம்பிரதாயங்கள் , உணவு பழக்கங்கள் - tastes ஒவ்வொருவருக்கும் கடத்தப்படுகின்றன. இங்கு பெண்களுக்கான பாத்திரம் பங்களிப்பு பற்றி லீனா ஆய்வு  செல்கிறது. லீனா எழுதுகிறார்

The place of women as active agents and instructions in the arena of food and rituals also implies that women  who command its repertoire of rules gain special respect and gives them a certain self identity and self esteem. For most women these practices are an important avenue of self expression and social recognition. They also act as a medium which helps women exercise power over the women and men within the family..

The processes within which women carve out a living space also reinforce caste and its boundaries.

ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சியிலும் நடக்கும் விஷயத்தையே இங்கு லீனா  காட்டி அதற்கு theoretical value வை சேர்க்கிறார். 

Marriage and sexual relations constitute a central arena in which caste impinges on women’s lives. பிறப்பு வழி  சாதி என்பதில் ஆண் தன்மை என்கிற அம்சம் மேலோங்கி இருந்தாலும் தாயின் சாதி என்பது புறந்தள்ள முடியா பேச்சுப்பொருளாகவும் தொழிற்படுகிறது. லீனா இதை caste in fact functions as a principle of bilateral affiliation என எழுதுவார். 

சாதி எல்லை காப்பு boundary maintenance என்கிற ritual purity சடங்காசார தூய்மை- எங்கள் பழக்க வழக்கம் என்கிற விட்டுக்கொடுக்காமை நீடிப்பதைக் காண்கிறோம். இது அம்பேத்கர் பேசிய பிராம்மணர்களிடமிருந்து சாதி படிநிலைகள் பார்த்து ஒழுகுதல் முறையால் வந்திருந்தாலும், அனைத்து சாதிப் பிரிவினர் குடும்ப குல வழக்க சடங்கு ஆசாரங்களாக தொடர்வதைக் காண்கிறோம்.

திருமணம் என்பதுடன் எதுவும் முடிவதில்லை. அங்கு துவக்கி வைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. Women need to be and their sexuality contained at all times  thro social control, idealisation of women’s role and thro emphasis on female modesty. The importance of the purity of caste affects a woman in all life stages என்பதை பார்க்கச் சொல்கிறார் லீனா.

பெண் தூய்மை என்பதில் எல்லா சாதி எல்லைகளும் காப்பிட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை லீனா ஆய்வு புலப்படுத்தும்.  Restrained and controlled sexuality  is a prerequisite for socially sanctioned motherhood என்கிற மிக முக்கிய புள்ளியை தொட்டுக்காட்டுகிறார் லீனா. அப்படி அப்பெண் அந்த சாதி குடும்பத்தில் நுழைந்து முழு உறுப்பினர் ஆக்கப்படும் ஏற்கப்படும் தொடர் நிகழ்வுகள் காலந்தோறும்  அரங்கேற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

இந்நூலில் பல ஆய்வுத்தாள்கள் இடம் பெற்றுள்ளன. விருப்பமுள்ளவர் விருப்பமான ஆய்வைத்தாளைக்கூட தனியாக வாசிக்க முடியும்.

The political Economy of caste

Caste and Hinduism

Caste in rural India

BC movement in TN

BC and social change in UP and Bihar

Buddhism a case study of village Mahars

The judicial view of OBC

Job reservation and efficiency

Mandal 

Muslims social stratification 

Caste amongst Christians 

நூலின் கட்டுரைகள் தலைப்பை பார்க்கையில் தன்னளவில் முழுமையாக  சாதி குறித்து சித்திரம் ஒன்றை   - அதன் இருப்பை அதே நேரத்தில் அது பெற்று வரும் mobility குறித்தும் இந்நூல் பேசுவதாக சொல்லலாம். எவரும் சாதி குறித்த முழுமையை தந்துவிடமுடியாது. ஆங்காங்கே கிடைக்கும் perceptions உரிமைகோரல்களை மேலேறுதல் என்கிற தவிப்பின் போராட்டங்களை உணர்த்துதல் என்கிற அளவில் அவற்றை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

சாதியும் தன்னளவில் அப்படியே தேங்கி நின்றுவிடவில்லை. ஆங்காங்கே சலனங்கள்  அசைவுகள் தென்படாமல் இல்லை. தன் இறுக்கத்தை பொதுவெளிகளில் குறைத்துக்கொண்டும், உள்ளிடங்களில் அதன் இருப்பை வைத்துக்கொண்டும் சாதி சமூகம் சடங்குகளின் வழி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. பொது வெளி மதிப்புகள் கூடி , உள்ளிட ஆசாரங்கள் மதிப்பிழத்தல் என்கிற காலவெளியில் அதன் வீச்சு இற்றுப்போகலாம்.  குடும்ப உடைவுகள் சமூக மீறல்கள் என்கிற போராட்டங்கள் வலுப்பெறும்போது 

மீத மிச்ச எச்ச சாயல்கள்  என அது ஓயலாம்.  அடையாளப் போராட்டங்கள் எவ்வழியில் சமூகத்தை அழைத்துப் போகுமோ ..ஊகிக்கமுடியவில்லை.

South VS North Book by RS Nilakantan

 

Inputs from

South VS North Book by RS Nilakantan

 

  Agriculture contributes only 3.91 % to TN's GSDP. That is the lowest proportion in the country among the large states. Kerala at 4.07 %. Telangana, Maharashtra and Karnataka are 5 %, 5%, 5% and Andhra is having 11 % of its GSDP. Punjab 13 %, UP 13 %, WB 12 %, Rajasthan 12 %, Gujarat 6 %, Haryana 8 % and MP 21 %

 

Punjab is a relatively prosperous state with reasonable levels of Human dev that still has a high degree of Independence on farming as an economic activity - also highest yields per hectare.

 

Rice yield in KGs per hectare

MP 2026 Kg, TN 3923, Punjab 4366, Bihar 2409, Haryana 3181, orissa 1765, AP 2792

The Global average is 4300 Kg. Only Punjab matches that.

 

 In the case Wheat Yield

Punjab 5090, MP 2993, Haryana 4412, UP3269, Bihar 2816, Gujarat 2932.

Punjab yield is higher comparing global average 4400 kg.

 

Sugarcane Yield

 

UP 79255 Kg, maharashtra 92166, TN 92002, Gujarat- 66220, Punjab 83583, Haryana 84500, Ap 80283

 

Agri Rural Housholds %

AP 42 %, Bihar 51, Haryana 61, Gujarat 67, Karanataka 55, Kerala 27, MP 71, Maharashtra 57, Punjab 51, rajasthan 78, TN 35, UP 75 and WB 45 %

The States where dependence on Agri is low are also states that arae urbanised the most. Those that do depend are agriculture are urbanised least.

 Urban Pop % as per 2011 census

AP 33%, Bihar 11, Gujarat 43, haryana 35, Karnataka 39, Kerala 48, MP 28, Maharashtra 45, punjab 37, TN 48, UP 22, WB 32

 

Average daily wage for Non Agri Labourers Rural in Rupees

AP 291, Bihar 267, Gujarat 234, Haryana 376, Karnataka 264, Kerala 670, MP 206, maharashtra 240, Orissa 241, Punjab 332, Rajasthan 313, TN 448, UP 272, WB 291.

Except TN and Kerala all are low wage states.

 

For Agri Labourers

AP 301, Bihar 257, Gujarat 208, Haryana 392, Karnataka 292, Kerala 701, MP 198, maharashtra 231, Orissa 232, Punjab 349, Rajasthan 298, TH 410, UP 258, WB 267

Except Kerala no one is touching the wage equivalent CG Minimum wage .kerala is giving higher than that. Even TN is giving 12000/ month only.

Wednesday, February 21, 2024

பிமல் ஜலான் பேசும் சீர்திருத்தங்கள்

 

                    பிமல் ஜலான் பேசும் சீர்திருத்தங்கள்

India Ahead 2025 and beyond பொருளாதார அறிஞர் பிமல் ஜலான் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம். 2018ல் வந்த நூல்.

அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்றத்தின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பு, அரசியலில் கிரிமினல்களை ஒழித்தல், லஞ்ச ஊழல் பிரச்சனை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல், நிர்வாக சீர்திருத்தம், 21 ஆம் நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக்குதல், இந்தியா எனும் கனவு என பல்வேறு அத்தியாயங்களில் பிமல் ஜலான் தனது பார்வையை, தான் உணரும் தேவையை முன்வைத்துள்ளார்.

2018ல் எழுதப்பட்ட அடிப்படையில் அப்போது இந்தியா வர்த்தக சாதக சூழல் என்கிற குறியீட்டில் 130 ஆம் இடத்திலிருந்து 100 ஆம் இடத்திற்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் பொருளாதார வலிமை கூடக்கூட வறுமை ஒழிப்பு, கல்வியின்மை போக்குதல், நோய்க்கூறு தடுப்புகள் ஆகியவற்றில் இந்தியா பெருமளவு மாற்றங்களைப் பெறும் என்கிற நம்பிக்கையை ஜலான் சொல்கிறார்.

 இந்திய ஜனநாயகத்தை மேலும்  accountable பொறுப்புள்ள ஒன்றாக மாற்றவேண்டிய அதி அவசரத்தை ஜலான் முன்வைக்கிறார். இதற்கு மத்திய மாநில உறவுகளின் நிர்வாக உறவு மேம்பாட்டின் அவசியத்தை உணரச் சொல்கிறார்.

ராஜ்ய சபா உறுப்பினர்கள் மாநில மேம்பாட்டிற்கு நிற்கத்தக்க வகை சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். நாடாளுமன்ற நடைமுறைகள்மேலும் ஒழுங்கு சீருக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

நீதிமன்ற சீர்திருத்தங்கள் மீது உடனடி கவனம் தேவைப்படுகிறது.

அமைச்சர்களுக்கும் சிவில் அதிகாரப் பிரிவினருக்குமான வேலைப்பிரிவினை முறையாக்கப்பட்டு  சிவில் அதிகாரிகளை அதிகாரப்படுத்தலும் பொறுப்புக்குள்ளாக்குதலும் செய்யப்படவேண்டும்.

அதிகாரபரவலாக்கம் என்பதை நடைமுறையாக்கிட சில பொதுச்சேவைகள் தல ஆட்சியிடம் ஒப்படைக்கப்படவேண்டும். சமூகநல திட்டங்கள் அமுலாக்கத்தை ஒப்படைக்கவேண்டும். குறிப்பாக ஆரம்ப கல்வி, சுகாதார மருத்துவம் போன்றவற்றை தல ஆட்சியின் கீழ் கொணரலாம்.

 fragmentation of political parties ஒருவகை ஜனநாயக வெளிப்பாடாக தோன்றினாலும் பல சிறு கட்சி செயல்பாடுகள் பின்னடைவையும் தருகின்றன.  defection  என்பதில் இந்த அரசியல் கட்சி உடைவுகள் பெரும் பங்காற்றுகின்றன. இதனால் ஒருவகை coalition govt  என்கிற சோதனைகள் நடந்தேறினாலும் அவை நம்பிக்கையை உருவாக்கமால் போன அனுபவம் விஞ்சி நிற்கிறது.

 ஜி எஸ் டி நல்ல முன்முயற்சி என்கிறார் பிமல். மாநிலங்கள் திட்டம் கொடுத்து அதை மத்திய சர்க்கார் ஏற்பு கொடுப்பது என்பதற்கு பதிலாக the powers and responsibility for financing development programmes should be transferred to states  என்கிற முன்மொழிவை பிமல் செய்கிறார்.

 அடுத்து அவர் தரும் முக்கிய முன்மொழிவு

Just as the Finance Commission is constitutionally empowered to decide on the division of taxresources between the centre and the States, a similar federal commission should statutorily set up to decide on the devolution of all other forms of central assistance.

 UPSC நடைமுறை போலவே வங்கி, பொதுத்துறை, கல்வி, கலாச்சார இன்னும் பலவேறு நிறுவனங்களுக்கு  appointments  செய்திடும் முறை உருவாக்கப்படவேண்டும்.

 மிகுந்த துறை சார்ந்த தேர்ச்சி பெற்றவர்களை கேபினட்டிற்கு கொணர்வதில் உள்ள சிக்கலைப் போக்கிட , கேபினட் பதவிகளில் 25 சத அளவிற்கு இப்படிப்பட்ட தேர்ச்சி பெற்றவரை வெளியிலிருந்து அமர்த்துவது- அவர்கள் நாடாளுமன்ற துறை சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் ஆனால் வாக்குரிமை கிடையாது என்ற  executive mix  ஒன்றை அமெரிக்க சாய்வில் பிமல் முன்வைக்கிறார்.

 

அடுத்து அவர் விவாதிப்பது  State funding for elections.  அதன் சாதக பாதக விவாதங்களை அவர் விவரிக்கிறார். 20 லட்சம் கோடி தேவைப்படலாம் என்கிற மதிப்பீட்டைத் தருகிறார். எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி எனத்தரப்படும் 3500 கோடியை நிறுத்திவிட்டு அதை தேர்தல் செலவு நிதி ஆக்கலாம் என்கிறார். 10-15 சதம் நாடாளுமன்ற இடங்களைப் பெறும் கட்சிகளை பெரிய கட்சிகள் என்றும், மற்றவை சிறு கட்சிகள் என வகைப்படுத்தி அதற்கேற்ற  state funding  ஈவைக் கொடுக்கலாம். எலக்டோரல் பாண்ட்ஸ் வந்தபோது அது மட்டும் போதாது என பிமல் எழுதியிருந்ததைக் காணலாம்.

 சபாநாயகர்களுக்கு அவையின் கண்ணியத்தை ஒழுங்கை காப்பதற்கான கூடுதல் அதிகாரம் என்பது பற்றி பிமல் பரிந்துரைக்கிறார். வாய்ஸ் ஓட் மூலம்  ஏற்பு முறை கூடவே கூடாது என்கிறார். நிலைக்குழுவிற்கு போகாமல் பட்ஜெட் மற்றும் நிதி மசோதா ஏற்கப்படக்கூடாதென்கிறார். அதை கட்டாயமாக்கும் நடைமுறை அவசியம்.

 இந்திய வளர்ச்சி எனச்சொல்லி செய்யப்படும் எதிலும் 25 கோடி மக்கள் மட்டுமே பயன் பெறுகிறார்கள். 100 கோடி மக்கள் விளிம்புநிலை வாழ்க்கையிலேயே தொடர்கிறார்கள்.

இதற்கு institutional initiative is required for enforcing ministerial responsibility for the efficient delivery of public services and anti poverty programmes. ஊழல் கிரிமினல் குற்றப்பின்னணி உடைய எவரும் அமைச்சராக அனுமதிக்கக்கூடாது. அனைத்திற்கும் மேலாக மிக முக்கியத் தேவையாக பிமல் சொல்வது  depoliticization of civil services. Their non accountability, corruption, ineptitude , non functional attitude  போக்கப்பட நடவடிக்கைகள் தேவை.  separation of powers between Ministers and Civil servants concerning postings, transfers and promotions  என்கிறார்.  Executive, legislature, Judiciary separation of powers  போல இதுவும் அவசியம் என்கிறார். சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு சாதகமாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.  Greater empowerment of Civil service and greater accountability  என்கிற முழக்கமாக அவரது பரிந்துரை செல்கிறது.

Fiscal empowerment  செய்யப்படவேண்டுமானால்  altering pattern of expenditure away from salaries and loss making commercial enterprises and allocating resources for development of infra and socially productive sectors  எனப் பரிந்துரைக்கிறார்.  சம்பள செலவு வீக்கம், பொதுத்துறை நட்ட செலவு மீது போர் என அவர் பேசுவதை பார்க்கமுடிகிறது.

 

நாடாளுமன்ற நடைமுறையை மேம்படுத்த இப்படி ஒரு பரிந்துரையையும் பிமல் வைக்கிறார்.

Those parties which join a pre election or post election coalition should not be able to defect without having to seek re election. auch an amendment in anti defection law will help in strengthening collective responsibility of the cabinet .

 2014ல் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் மீது கிரிமினல் வழக்கு இருந்ததை பிமல் சொல்கிறார். அசெம்பிளி தேர்தல்களிலும் இது அதிகமாகியே வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் மீதான் வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை வலியுறுத்துகிறார்.

 Transparency International- Global Corruption Barometer  படி 100 என குறியீடு இருந்தால் அது சுத்தமான தூய்மை கொண்ட நிர்வாகம் எனப் பொருள். ஜீரோ என்றால்  total corrupt  எனப் பொருள். 2016ல் வந்தபடி இந்தியா 40 என்கிற குறியீட்டைப் பெற்றது.  corruption high  என்றுதான் பொருள்.

 2023க்கு போய் பார்த்ததில் இந்தியா 39 குறியீட்டைப் பெற்று சரிந்துள்ளது. எந்த நாடும் 100 என்கிற தூய்மைப் புள்ளியைத் தொடவில்லை. டென்மார்க் 90 தொட்டு இலஞ்சமில்லா தூய்மைக்கு நெருங்கியுள்ளது. பின்லாந்த், நியிசிலாந்த், சிங்கப்பூர் போன்றவை 80 யைத்தாண்டி தூய்மை நோக்கி பயணிப்பதைக் காணமுடிகிறது.

பிமல்  corruption multiplier  நிலவுவதைச் சொல்கிறார்.  there is corruption multiplier which occurs of a wrong choice of public projects, loss of tax revenues, low quality of goods and services by corrupt procedures- frequent breakdown of equipments. political corruption  தாண்டவத்தை பிமல் சொல்கிறார்.

 ஊழல் லஞ்சத் தடுப்பு உடனடியாக கவனம் பெறக்கூடிய ஒன்றாக பாவிக்கப்பட அவர் வேண்டுகிறார்.

The supply side of corruption can be checked if there is substantial reduction in the size and functions of Govt- penalties like dismissal  போன்றவற்றை அவர் முன்மொழிகிறார். அரசியல் ஊழல் தடுப்பிற்கு அமைச்சரின் அளப்பரிய அதிகாரங்களை பறிக்கவேண்டும் என்கிறார்.

 மக்கள் வாழ்க்கைத்தரம் என்பதில் உணவு பாதுகாப்பு, உடல் ஆரோக்கிய மேம்பாடு, கல்வி வசதிகள், வேலைவாய்ப்புகள் என்பன பரிசீலிக்கப்படவேண்டியவை. இந்தியா இதில் போகவேண்டிய தூரம் மிக அதிகமாக இருக்கிறது.

Slower pace of reform based on consensus- durable to democracy  என்பதையும் கவனப்படுத்துகிறார் பிமல்.

Thursday, January 4, 2024

2023க்கு வணக்கம்

 

2023க்கு வணக்கம்

கடந்து போன 2023க்கு எனது வணக்கம். உடல் உபாதை மற்றும் மழை பாதிப்பு நாட்கள் நீங்கலாக மீதி பெரு நாட்கள் உழைக்க அருள் கூர்ந்த ஆண்டாக அமைந்தது. முகநூலில் சில நாட்களைத் தவிர தொடர்ந்து பதிவு இடமுடிந்தது. Pattabiwrites  வலைப்பூவில் 500 பக்க அளவில் எழுத முடிந்தது. பங்கேற்ற கூட்டங்கள் மிகக் குறைவு. முறையாக மாதந்தோறும் என கணக்கிட்டு  பார்த்தப்படி 117 புத்தகங்களை வாசிக்க 2023 நல்வாய்ப்பைத் தந்தது. ஆங்கில புத்தகங்கள் 50 ஆகவும்,தமிழ் புத்தகங்கள் 67 ஆகவும் அமைந்தன. வெகுசில மறு வாசிப்புக்குள்ளானவை. நீள அகல உயர புத்தகங்களும் ஏராளம். சிறு  புத்தகங்களும் இதில் அடங்கும். புத்தகங்களுக்காக கொஞ்சம் ரூபாய் செலவிட முடிந்தது. அமேசான் அடிக்கடி வரலானது.

 


பல தரப்பு வாதங்களை முன்வைக்கும், பல் ரசனை- பல இச புத்தகங்களை வாசித்திருப்பதை , இதைப் பொருட்படுத்துபவர் உணரமுடியும். உலகின் பன்முகத்தை அதன் பல வாசங்களை இந்த புத்தகங்கள் நல்கின. டெண்டுல்கரின் மகாத்மா 8 வால்யூம்களை முடிக்க முடிந்த என்னால், பியாரிலால்- சுசிலாவின் 11 வால்யூம்களை முடிக்கமுடியாமல் 8 வது வால்யூமில் 2023 என்னை நிறுத்திவிட்டது. எனது வாசிப்பு வேக போதாமையால் செய்யவியலாமல் போனது.

என்னைவிட விரிவாக வீச்சாக படித்தவர் பலர் இருக்கக்கூடும். மிகச் சாதாரண எளிய நடுத்தர - சி செண்டர் வாழ்க்கையிலிருந்த வந்த - தொழிற்சங்க பழக்கம் தவிர வேறு கல்வி வாசனை இல்லாத எளிய மனிதன் என்ற வகையில் தீவிர வாசிப்பு பழக்கம் பற்றிப் பிடித்து அழைத்துச் சென்றதால் இந்த அளவாவது செய்ய நேர்ந்தது. உலகின்/ இந்தியாவின் ரம்யம் மட்டுமல்ல அதன் விரிவும் ஆழமும் அகலமும் பிரம்மாண்டத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்து சற்றாவது உணர முடிந்தது. என்னுள் அவ்வப்போது எழும் ego களுக்கு குட்டுகளும் விழுந்தன.

 

வாசித்தவைகளை தந்துள்ளேன். அனைத்தையும் சிலராவது வாசித்திருக்கக்கூடும். வாசிக்காதவர் எப்போதாவது வாசிக்கக்கூடும் என்ற வகையில் அவை உதவலாம். வாசிப்பும் எழுத்தும் உழைப்புதான் என ஏற்றால், 2023ல் உழைத்திருக்கிறேன் எனச் சொல்லலாம்.

 

2023ல் படித்த ஆங்கில புத்தகங்கள்

1. The Indian Constituent Assembly deliberations on democracy edited by Udit Bhatia

2. India Through the Ages A survey of the growth of Indian life and thought by Sir Jadunath Sarkar Madras univ lectures 1928

3. K M Munshi by v B Kulkarni

4. Rajendra Prasad Autobiography

5. DeenDayal Upadhyaya by Mahesh Sharma

6. Real Marxist Tradition by John Monyleux

7. Mahatma Life of MKG by D G Tendulkar vol 1

8. Mahatma Life of MKG by DGT vol 2

9. The Saffron Surge untold story of Rss leadership

10. Marx’s Revenge the resurgence of Capitalism and The death of Statist Socialism by Meghnad Desai

11. Mao Zedong A biography by Jonathan Clements

12. Mahatma Life Of MKG D G Tendulkar vol 3

13. Ambedkar an intellectual biography by Vijay mankar

14. 75 years of Indian Economy by Sanjaya Baru

15. Mahatma vol 4 by D G Tendulkar

16. Mahatma vol 5 by D G Tendulkar

17. Mahatma vol 6 by D G Tendulkar

18. Karl Marx Greatness and Illusion by Gareth Jones

19. Marx before Marxism David McClellan

20. Interpreting The Dravidian Movement M S S Pandian

21. Mahatma vol 7 by D G Tendulkar

22. Mahatma Life of MK Gandhi by D G Tendulkar vol 8

23. Indian Ideas of Freedom by Dennis Dalton

24. Mahatma Gandhi vol 1 The Early Phase Pyarelal

25. Dr Babasaheb Ambedkar Life and Mission by Dhananjay Keer

26. Search for Truth Dr Radhakrishnan

27. Mahatma Gandhi vol 2 The discovery of Satyagraha on the threshold Pyarelal

28. Minoo Masani by S V Raju

29. Bal Gangadhar Tilak by Manoj Kumar and Monika

30. Periyar political Biography by Bala Jeyaraman

31. Mahatma Gandhi vol 3 Pyarelal

32. Marx’s Das Capital A Biography by Francis Wheen

33. Reconstructing Lenin by Tamas Krausz

34. Understanding Dravidian movement by prof Karthigesu Sivathamby

35. Who wrote Bhagavad Gita by Meghnad Desai

36. Mahatma Gandhi vol 4 Sushila Nayar

37. Caste as social capital by prof R Vaidyanathan

38. Mahatma India Awakened vol 5 by Sushila Nayar

39. The political Career of E V Ramasami Naicker -viswanathan

40. The Dravidian Movement in TN and its legacy Lectures by A N Sattanathan ( Rereading)

41. Nehru’s India Essays edited by NayanTara Sahgal 

42. The Origins and Development of Hinduism by A L Basham

43. Mahatma vol 6  salt satyagraha the watershed- Shushila Nayar

44. varna Jati caste by Rajiv Malhotra and Vijaya

45. Buddhism The Marxist Approach

46. Veer Savarkar by Dhananjay Keer

47. Mahatma vol 7 by Shushila Nayar

48. communism in Indian politics

49. Milestones - Indirani Jagajivan Ram

50. Hindus in Hindu Rashtra Anand Rangathan

 

 

 

2023ல் வாசித்த தமிழ் புத்தகங்கள்

1. ஜேபி எழுதிய மக்கள் சுயராஜ்யம் தஞ்சை சர்வோதயா

2. பார்ப்பனியத்தை விமர்சித்தல் by முரளி

3. சுப்பிரமண்ய சிவா கட்டுரைகள்

4. எஸ் ஸ்ரீநிவாச அய்யங்கார் பப்ளிகேஷன் டிவிஷன்

5. பரதகண்ட புராதனம் கால்டுவெல்

6. காமராஜர் ஓர் ஆய்வு வி கே நரசிம்மன்

7. காங்கிரஸ் மகாசபை வரலாறு பட்டாபி சீதாராமய்யா

8. டேவிட் ரியாஸ்னாவின் மார்க்ஸ் எங்கெல்ஸ்

9. இந்திய பெருமுதலாளி வர்க்கம் சுனிதிகுமார் கோஷ் (மறு வாசிப்பு)

10. கார்ல் மார்க்ஸ் - .மார்க்ஸ்

11. ஒளரங்கசீப் ஆட் ரே ட் ரஷ்கே தமிழில் ஜனனி ரமேஷ்

12. மார்க்சின் மூலதனம் - தமிழில் தியாகு வால்யூம் 1

13. வல்லபாய் பட்டேல் - ஜே பட்டேல்

14. தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் எஸ் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்

15. திராவிட இயக்கம் - பேரா அன்பழகன்

16. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - நீலகண்டன்

17. கம்பரிடம் யான் கற்ற அரசியல் பொ சி

18. எனது நினைவுகள் கோவை அய்யாமுத்து

19. தெற்கிலிருந்து ஒரு சூரியன்

20. பெரியார் அம்பேத்கர் நட்புறவு ஒரு வரலாறு- கி வீரமணி

21. அடி - தி. ஜானகிராமன் நாவல்

22. மகாபாரதம் மாபெரும் விவாதம் - பழ கருப்பையா

23. புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி ( மறு வாசிப்பு)

24. தி மு வரலாறு

25. இந்தியத் தாயின் பணிக்கு .. சுவாமி விவேகானந்தர்

26. மால்கம் எக்ஸ் - ரவிக்குமார்

27. தமிழர் பண்பாடு - வையாபுரிப்பிள்ளை

28. கலையும் வாழ்வும் டால்ஸ்டாய் தமிழில் டி சி ராமசாமி

29. கயிறு தகழி சிவசங்கரப்பிள்ளை

30. மறைமலை அடிகள் நாட்குறிப்புகள்

31. வைக்கம் காந்தி கட்டுரைகள் வேங்கடராஜு

32. புத்தரின் புனித வாக்கு பால் காரஸ்

33. ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு புலவர் கா.கோவிந்தன்

34. மறைமலையடிகள் வரலாறு புலவர் அரசு

35. அரிஜன அய்யங்கார் சம்பந்தம்

36. திலக மகரிஷி ஜீவிய வரலாறு சி

37. பிறப்பொக்கும் நாவல் கன்யூட் ராஜ்

38. பெரியாரின் இறுதி உரை

39. ஈரோட்டுப்பாதை சரியா ஜீவா

40. வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும் நெடுஞ்செழியன்

41. ஆரியமாயை அண்ணா

42. திராவிட மாயை ஒரு பார்வை vol 1 சுப்பு

43. திராவிட அரசியலின் எதிர்காலம் சுகுணா திவாகர்

44. புறநானூறு தமிழர் நாகரீகம்  சாமி சிதம்பரனார்

45. மொழிஞாயிறு பாவாணர்   பெருஞ்சித்திரனார்

46. ரிக் வேதகால ஆரியர்கள்  ராகுல சாங்கிருத்தியாயன்

47. ஏழு நதிகளின் நாடு சஞ்சீவ் சன்யால்

48. திராவிட மாயை பகுதி vol 2 சுப்பு

49. ராஜகோபாலாச்சாரி ஆர் கே மூர்த்தி (மறு வாசிப்பு)

50. திராவிட மாயை பகுதி வால்யூம் 3 சுப்பு

51. பெரியார்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

52. பாலஸ்தீனம் - சாமிநாத சர்மா

53. முசோலினி - வெ சாமிநாத சர்மா

54. தமிழ் இலக்கிய வரலாறு - தேவநேயப் பாவாணர்

55. குறளமுதம் தமிழ் வளர்ச்சித் துறை

56. சனாதன மறுப்பாளர் வள்ளலார்- ஜெயராமன்

57. திரும்பத் திரும்ப திராவிடம் பேசுவோம் - .திருமாவேலன்

58. நிலமெல்லாம் இரத்தம் - பா ராகவன்

59. ஜவஹர்லால் போராட்டக்காலச் சிந்தனைகள் அர்ஜூன் தேவ்

60. தலித்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி வெங்கடேசன்

61. இஸ்லாம் தத்துவம் - ராகுல்ஜி

62. பழந்தமிழர் அரசியல் - சாமி சிதம்பரனார்

63. ஆஷ் அடிச்சுவட்டில் இரா வேங்கடாசலபதி

64. இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம் - எம் என் ராய் (மறு வாசிப்பு)

65. இஸ்லாமும் ஜிகாத்தும் ஜி நூரணி

66. கைலாசபதி இராம சுந்தரம்

67. மூலதனம் – வால்யூம் 2 தமிழ் தியாகு